Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ள முருங்கை !!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (16:35 IST)
முருங்கைக்காய் குறைவான விலையில் கிடைக்கும் அதிக சத்து நிறைந்த காயாகும். முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன.


காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.

முருங்கைக்காயின் இலைகள் மற்றும் பூக்களில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. இவை தொண்டை மற்றும் சருமத்தில் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களைத் தடுக்கும்.

முருங்கையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ப்ரீ-ராடிக்கல்களால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.

முருங்கைக்காயில் ஜிங்க் அதிகம் உள்ளது. இதனை உட்கொண்டால், பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு தாம்பத்ய வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

முருங்கைக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. மேலும் இதனை உட்கொண்டு வந்தால், சிறுநீர்ப்பை நன்கு செயல்ட்டு, இதனால் சர்க்கரை அளவு குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும்.

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் முருங்கைக்காயில் உள்ள பினோலிக் மூலக்கூறுகளான குவாட்டசின் மற்றும் காம்பெஃபெரால் புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கக்கூடியது. நியாமிஸின் என்னும் இதில் உள்ள ஒரு பொருள் உங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் வளருவதை தடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments