முல்லைப் பூவும் இதன் இலையும் சேர்த்து இடித்து சாறுபிழிந்து, அதனுடன் சம அளவு நல்லெண்ணை சேர்த்துக் காய்ச்சி வடித்து வைத்துக் கொள்ளவும்.
இதில் 4 துளி வீதம் காதில் விட்டு வர காதில் சீழ் வடிதல் குணமாகும். இரவு நேரத்தில் இந்த மருந்தை காதில் விட வேண்டும்.
முல்லைப் பூச் செடியின் வேரை தூள் செய்து, அதனுடன் சிறிது வசம்பு தூளை சேர்த்து எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து பூசி வர தோல் நோய்கள் போகும்.
உடல் வீக்கம் உள்ள இடத்தில் முல்லைப் பூவை அரைத்து பற்றுப் போட அந்த வீக்கம் கரையும்.
முல்லைப் பூ இலையை நெய்யில் வதக்கி ஒத்தடமிட தொண்டை வலி குறையும்.
வாய்ப்புண் உள்ளவர்கள், ஒன்றிரண்டு முல்லைப் பூ இலையை நன்கு கழுவி வாயில் போட்டு மென்று வர வாய்ப்புண் குணமாகும்.