Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.133 மோமோஸ் டெலிவரி செய்யாத சோமேட்டோ-வுக்கு ரூ.60000 அபராதம்..!!

Senthil Velan
புதன், 17 ஜூலை 2024 (16:17 IST)
கர்நாடகாவில் பெண் ஒருவருக்கு  மோமோஸ் வழங்காத வழக்கில் சோமேட்டோ நிறுவனத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
கர்நாடக மாநிலத்தின் தார்வாடை சேர்ந்த பெண் ஷீத்தல். 2023 ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று சோமேட்டோவில் ஒரு பிளேட் மோமோஸ் ஆர்டர் செய்துள்ளார். அந்த மோமோஸின் விலை ரூ.133 என்றும் அதற்கான பணத்தை கூகுள் பே மூலம் ஷீத்தல் செலுத்தியுள்ளார். சில நிமிடங்களில் ஷீத்தலின் போனுக்கு மோமோஸ் டெலிவரி செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது.

இதில் ஷீத்தல் குழப்பமடைந்து விட்டார். அவர் ஆர்டர் செய்த மோமோஸும் வரவில்லை. அவரது வீட்டுக்கு டெலிவரி பார்ட்னர்களும் வரவில்லை. ஆனால் ஆர்டரை சோமேட்டோ டெலிவரி ஏஜெண்ட் வாங்கிச் சென்றுவிட்டதாக உணவகம் தெரிவித்துள்ளது. அந்த ஏஜெண்டை தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை. 
 
இதைத் தொடர்ந்து சோமேட்டோ கஸ்டமர் சர்வீஸ் எண்ணை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். இதற்கு 72 மணிநேரங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் அதற்குள் தீர்வு காண்பதாக சோமேட்டோ கஸ்டமர் சர்வீஸில் இருந்து இமெயில் வந்துள்ளது. ஆனால் சொன்னபடி எந்த தீர்வும் கிடைக்கவில்லை. 
 
இதையடுத்து விரக்தியடைந்த ஷீத்தல் சோமேட்டோவுக்கு 2023 செப்டம்பர் 13 ஆம் தேதியன்று ஒரு லீகல் நோட்டீஸை அனுப்பினார். பலன் இல்லாததால் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஷீத்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகார்தாரர் கூறியபடி அவருக்கு செய்ய வேண்டிய டெலிவரியை சோமேட்டோ செய்யவில்லை என்றும் இதற்கு சோமேட்டோ நிறுவனமே முழுப் பொறுப்பாகும் என்றும் கூறியது.

ALSO READ: முதுகெலும்பு 'டமால்' ஆட்சி.! உடனுக்குடன் கொள்ளையடிக்கும் மாடல்.! தமிழகத்தை விளாசிய பாஜக.!!

மேலும் ஷீத்தலுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கும் மன உளைச்சலுக்கும் இழப்பீடாக ரூ.50,000மும் வழக்குச் செலவாக ரூ.10,000மும் சோமேட்டோ நிறுவனம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
 
.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

30 புதிய சிசிடிவி, 40 புதிய செக்யூரிட்டி: மாணவிகள் பாதுகாப்பிற்காக அண்ணா பல்கலை. உத்தரவு

என்னை பிரதமர் வேட்பாளர் என்று கூறாமல், துணை முதல்வர் என்று கூறுவதா? திருமாவளவன்

கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினோம்.. ராமதாஸ் சந்திப்புக்கு பின் அன்புமணி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments