Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Mahendran
புதன், 17 ஜூலை 2024 (16:04 IST)
தமிழகத்தில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல் அதாவது ஜூலை 17 முதல் ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அடுத்தடுத்த நாட்களில் நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19 முதல் 23 வரை தமிழகம் புதுவை காரைக்கால் பகுதியில் லேசான மழை பெய்யும் என்று சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்கு போக மாட்டேன்.. 2026ல் அம்மாவின் ஆட்சி: ஓ பன்னீர்செல்வம்

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments