Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்போன் மூலம் ஆதார் எண்ணை முடக்கலாம் ! புதிய அறிவிப்பு

செல்போன் மூலம் ஆதார் எண்ணை முடக்கலாம் ! புதிய அறிவிப்பு
, வியாழன், 16 மே 2019 (13:56 IST)
இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது, செல்போன் மூலமாய் குறுஞ்செய்தி அனுப்பியும் இணையதளம் வாயிலாக ஆதார் எண்ணை முடக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
சமீபமாகலமாய் ஒருவருடைய ஆதார் எண்ணை மற்றொருவர் முறைகேடாய் பயன்படுத்தி வருவது அதிகரித்துவருகிறார்கள். இத்தவற்றை தடுக்கவே இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளதாகவும் இந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
 
நமது தனித்துவ அடையாள ஆணைய இணைய பக்கத்தின் வாயிலாக அல்லது செல்போன் குறுஞ்செய்தியின் மூலமாகவும் ஆதார் எண்ணை முடக்க  முடியும்: மீண்டும் அதை திரும்ப பெறவும் முடியும்.
 
இந்த  வசதியைப் பெற 1947 என்ற எண்ணுக்கு GETOTP என்று டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்களை பதிவிட வேண்டும். பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போனுக்கு 6 இலக்க ஓடிபி கடவுச்சொல் வரும். அதை LOCKUID ஸ்பேஸ், ஆதாரின் கடைசி நான்கு இலக்க எண் ஸ்பேஸ் 6 இலக்க ஓடிபி கடவுச் சொல்லை டைப்செய்து அனுப்ப வேண்டும்.இப்படிச் செய்தால் ஆதார் எண் முடக்கப்படும். இதுகுறித்த தகவலும் செல்போனுக்கு விரைவில் வரும்.
 
அடுத்து குறுஞ்செய்து மூலமாக முடக்கத்தை திரும்ப பெற வேண்டிமானால் ஆதார் மெய்நிகர் எண்ணின் கடைசி 6 இலக்க எண்ணைப் பதிவிட்டு அனுப்ப வேண்டும். இதற்கு ஒரு ஓடிபி வந்ததும், UNLOCKUID - ஸ்பேஸ் மெய்நிகர் எண்ணின் கடைசி 6 இலக்கம், ஸ்பேஸ் - 6 இலக்க ஓடிபியை அனுப்பினால் முடக்கம் ரத்தாகி ஆதார் திரும்ப செயல்படத் தொடங்கிவிடும்.
webdunia
மேலும் www.uidai.gov.in என்ற இணையதளம்  மூலமாக ஆதார் எண்ணை முடக்கலாம்.முடக்கியதை திரும்பவும் பெறலாம்.
 
இந்தளத்திற்குள் சென்று மை ஆதார் என்பதை இயக்கி உள்ளே சென்றால் ஆதார் சர்வீஸ் என்று ஒரு அட்டவணை இருக்கும். அதில் ஆதார் லாக், மற்றும் அன்லாக் என்பதை கிளிக் செய்து தேவையான விவரங்களை பதிவு செய்தோமானால் ஆதார் தவறாக உபயோகிக்கபடுவதில் இருந்து தவிர்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் எல்லா மொழி விக்கிபீடியாவும் முடக்கம்