Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு… விருதுகளை திருப்பிக் கொடுத்த எழுத்தாளர்கள்

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (22:10 IST)
டெல்லியில் போராடும், எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கிய விருதுகளை மத்திய அரசுக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டனர்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா மாநில விவாசாயிகள் லட்சக்கணக்கானோர் டெல்லியில் இன்று 9வது நாளாகப் போராடி வருகின்றனர்.

நேற்று 4 வது கட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் பிரதிநிதிகளை  மத்திய அரசு அழைத்தது.  ஆனால் அப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், நாடு முழுவதும் முழு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இப்போரட்டத்திற்கு பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு அளித்துவரும் நிலையில்ப் நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் விடுக்கப்பட்டுள்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தனக்கு மத்திய அரவு அளித்த பத்ம விபூஷன் விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.

மேலும் பாஜகவுடனான கூட்டணியை முதல்வரின் கட்சியான சிரோமணி அகாலிதளம்  முறித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,டெல்லியில் போராடும், எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கிய விருதுகளை மத்திய அரசுக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டனர்.

இதில், சாகித்ய அகடாமி விருதுகளை வென்ற டாக்டர் மோகன் ஜித், டாக்டர் ஜஸ்விந்த்ரர் சிங், ஸ்வராஜ் பிர் ஆகிய எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை திரும்பக் கொடுத்துள்ளனர்.

மேலும் விவசாயிகளின் கோரிக்களை நிறைவேற்றாமல் மத்திய அரசு அவர்களை கடும் குளிரில் விட்டுள்ளதை எதிர்த்து பஞ்சாப் எழுத்தாளர்கள் என்று நினைவுகூறப்படுமென பஞ்சாப் எழுத்தாளர்கல் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments