Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரொம்ப துல்லியமா கணிச்சிருக்கீங்க! – இந்தியாவை பாராட்டிய உலக வானிலை ஆய்வு நிறுவனம்!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (10:45 IST)
இந்தியாவில் மிக சமீபத்தில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திய அம்பன் புயல் குறித்து துல்லியமாக கணித்ததாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் பாராட்டியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது புயலாக உரு மாறியது. அம்பன் என பெயரிடப்பட்ட அந்த புயல் சூப்பர் புயலாக மாறும் என்றும், மேற்கு வங்கம் மற்றும் வங்காள விரிகுடா இடையே கரையை கடக்கும் என்றும் இந்தியா வானிலை ஆய்வு மையம் கணித்தது, அதன் பேரில் மேற்கு வங்கத்தில் பேரிடர் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படியே குறிப்பிட்ட நேரத்தில் அம்பன் மேற்கு வங்கத்தில் கரையை கடந்தது.

வானிலை ஆய்வு மையத்தின்  கணிப்பின்படி செயல்பட்டதால் உயிர்சேதம் பெருமளவில் தடுக்கப்பட்டது. அம்பன் புயல் குறித்து மிக துல்லியமாக கணித்து செயல்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தை உலக வானிலை ஆய்வு மையம் பாராட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments