Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திஷா ரவி கைது விவகாரம்; பதிலளிக்க மகளிர் ஆணையம் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:55 IST)
பெங்களூரு மாணவி திஷா ரவியை டெல்லி போலீஸார் கைது செய்த விவகாரம் குறித்து மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசி வந்த பெங்களூர் மாணவி திஷா ரவி சூழலியல் ஆதரவாளர் க்ரேட்டா தன்பெர்கின் கருத்துக்களை திருத்தி வெளியிட்டதாகவும், வன்முறை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நடிகர்கள் பலர் திஷா ரவிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் பெங்களூரில் இருந்த திஷாவை டெல்லி போலீஸார் வந்து கைது செய்தது. வழக்கறிஞர் இல்லாமல் திஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது என பல்வேறு குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திஷா ரவி கைது செய்யப்பட்டது குறித்து டெல்லி மகளிர் ஆணையம் அம்மாநில போலீஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திஷா ரவி கைது விவகாரத்தில் சட்டப்படி போலீஸார் நடந்து கொள்ளவில்லை என்றும், அரசியல் சாசனத்திற்கு எதிராக போலீஸ் செயல்பட்டதாகவும் கூறியுள்ள மகளிர் ஆணையம் இதுகுறித்து 3 வாரங்களுக்குள் பதிலளிக்க டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments