Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உல்லாச டூர் போக பணமில்லை; குழந்தையை விற்று காசு சேர்த்த தாய்!

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (11:44 IST)
ஹைதராபாத் பெண் ஒருவர் தனது நீண்ட நாள் கனவு சுற்றுலா செல்ல பிறந்த குழந்தையை விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஹைக் ஸோயா கான். திருமணமான சில மாதங்களிலேயே கணவருடன் சண்டை ஏற்பட்டதால் தனியாக வாழ்ந்து வந்துள்ளார் ஸோயா. இவருக்கு பிறந்து இரண்டே மாதங்கள் ஆன ஆண் குழந்தையும் உள்ளது. ஸோயாவுக்கு நீண்ட நாட்களாக மும்பை சுற்றுலா செல்ல ஆசை இருந்து வந்துள்ளது. தனது சுற்றுலா கனவை நிறைவேற்ற எண்ணிய ஸோயா இடைத்தரகர் ஒருவர் மூலமாக தனது குழந்தையை ரூ.45 ஆயிரத்திற்கு வேறு ஒருவருக்கு விற்க திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து அறிந்த ஸோயாவின் கணவர் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். உடனடி நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார் ஸோயாவிடமிருந்து குழந்தையை மீட்டதுடன், ஸோயா, இடைத்தரகர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குழந்தையை தந்தையின் பொறுப்பில் அவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விசிக, நாம் தமிழர்கள் மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை.. அரசாணை வெளியீடு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அறிவிப்பு.. காங்கிரஸ் அதிருப்தியா?

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments