Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் நீதிபதியின் 2 ஐபோன்கள் திருட்டு.. திருடனை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்..!

Siva
வியாழன், 30 ஜனவரி 2025 (17:47 IST)
குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் என்பவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரது இரண்டு ஐபோன்கள் திருடப்பட்டதாகவும் திருடனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது அவரது இரண்டு ஐபோன்கள் திருடு போய்விட்டதாகவும் ஒன்று அவரது பெயரிலும் இன்னொன்று நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தின் பெயரிலும் உள்ளதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து நீதிபதியின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் சோதனை செய்த நிலையும் நிலையில் திருடனை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து அடையாளம் தெரியாத ஐபோனை திருடனை காவல்துறையினர் தேடி வருவதாகவும் விரைவில் திருடனை பிடித்து விடுவோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
குஜராத் மாநில பெண் தலைமை நீதிபதியிடம் இருந்தே ஐபோன்கள் திருட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென மாயமான அமெரிக்க விமானம்.. விமானத்தில் இருந்தவர்கள் கதி என்ன?

அமெரிக்கா செல்ல ரூ.1 கோடி கொடுத்தேன், ஆனால் அமிர்தசரஸ் வந்திறங்கினேன்: பெண்ணின் கண்ணீர் பேட்டி..!

அதிகாரம் உள்ளது.. மசோதாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை: ஆளுனர் தரப்பு வாதம்..!

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து! - அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

25 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஜனவரி மாதம்.. இந்த ஆண்டு கோடை கொளுத்துமா?

அடுத்த கட்டுரையில்