Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா.. ராமேஸ்வரத்தில் 2 பேர் கைது..!

பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா.. ராமேஸ்வரத்தில் 2 பேர் கைது..!

Siva

, செவ்வாய், 24 டிசம்பர் 2024 (09:36 IST)
ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடலில் குளித்துவிட்டு, உடைமாற்றும் பெண்கள் அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரம் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் குளித்துவிட்டு, அதன் பின் உடை மாற்றுவதற்கான அறைக்கு சென்று உடை மாற்றிக் கொள்வார்கள். அந்த வகையில், நேற்று அக்னி தீர்த்த கடற்கரையில் குளித்த முத்து என்பவரின் மகள் உடை மாற்றும் அறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டிருந்த போது, அங்கு ரகசிய கேமரா இருந்ததை கண்டுபிடித்தார்.

இதனை அடுத்து, அவர் உடனே தனது தந்தை முத்துவிடம் கூற, அவர் உடனே போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரகசிய கேமராவை கைப்பற்றி, அங்கு வேலை செய்த ஊழியர்களான ராஜேஷ் கண்ணன் மற்றும் மீரா மைதீன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பல மாதங்களாக ரகசிய கேமரா வைத்து, பெண்கள் உடை மாற்றுவது வீடியோ எடுத்து, இவர்கள் மொபைல் போனில் பார்த்ததும், நண்பர்களுக்கு பகிர்ந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரிடமும் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு தேர்வு விண்ணப்பங்களுக்கு 18% ஜிஎஸ்டி. பிரியங்கா காந்தி கண்டனம்