Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாட்ஸ் அப் சாட்டை பார்க்க முயன்றதால் கணவனை அரிவாளால் வெட்டிய மனைவி!

வாட்ஸ் அப் சாட்டை பார்க்க முயன்றதால் கணவனை அரிவாளால் வெட்டிய மனைவி!

வாட்ஸ் அப் சாட்டை பார்க்க முயன்றதால் கணவனை அரிவாளால் வெட்டிய மனைவி!
, திங்கள், 12 ஜூன் 2017 (16:13 IST)
உத்திரப் பிரதேசத்தில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவி யாருக்கு வாட்ஸ் அப்பில் குருஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருக்கிறார் என்பதை பார்க்க அவரது மொபைல் ஃபோனை பிடிங்கியதால் அவரை மனைவி அரிவாளால் வெட்டிய சம்பவம் நடந்துள்ளது.


 
 
21 வயதான நேத்ரபால் சிங்கிற்கும் 19 வயதான நீதி சிங்கிற்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்கள் திருமணமான சில மாதங்களிலேயே பிரிந்து தனித்தனியே வாழா ஆரம்பித்துள்ளனர்.
 
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நேத்ரபால் சிங் வீட்டில் நடபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள நீது சிங் வந்துள்ளார். அப்போது நீதி சிங் யாருடனே வாட்ஸ் அப்பில் சாட் செய்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது கணவர் நேத்ரபால் சிங் யாருடன் சாட் செய்துகொண்டிருக்கிறாய், உனது ஃபோனை கொடு என கேட்டுள்ளார்.
 
ஆனால் நீது சிங் அதற்கு மறுப்பு தெரிவிக்க உடனே நீதுவிடமிருந்து வலுக்கட்டாயமாக அவரின் போனை பிடுங்கியுள்ளார் நேத்ரா சிங். அதனால் கோபமடைந்த நீது சிங் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது கணவரை தாக்கியுள்ளார்.
 
படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீது சிங்கிற்கு திருமணத்துக்கு முன்னரே வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும், இது தெரியாமல் தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைத்ததாக நேத்ரா சிங்கின் தந்தை கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1.93 கி.மீ நீளத்தில் பீட்ஸா; உலக சாதனை படைத்த சமையல் கலைஞர்கள்