Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டிற்கு சென்றது ஏன்.? பிரதமர் மோடி விளக்கம்.!

Senthil Velan
செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (14:59 IST)
காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளுக்கு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது பிடிக்காததால் தலைமை நீதிபதி வீட்டில் நடந்த விழாவில் கலந்து கொண்டதை பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்கின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்தார்.  
 
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,  ஒடிசாவில் பழங்குடியின பெண் எனக்கு இனிப்பு ஊட்டியபோது என் தாயின் நினைவு வந்தது என்று தெரிவித்தார்.  அந்த பெண்ணின் ஆசிர்வாதம் போன்ற உணர்வுப்பூர்வமான அனுபவம் தான் என் வாழ்வின் மூலதனம் என்றும் என் அம்மா உயிருடன் இருந்தவரை என் பிறந்தநாளுக்கு அவரிடம் ஆசி பெற்றேன் என்றும் அவர் கூறினார்.
 
ஒடிசாவில் ஏழை, தலித், ஆதிவாசி குடும்பங்களின் ஒவ்வொரு கனவும் நிறைவேறும் என உறுதி அளித்த பிரதமர்,  ஆட்சிக்கு வந்த பிறகு புரி ஜெகநாதர் கோவிலில் பொக்கிஷ அறையை திறந்ததாகவும், ஜெகநாதரின் அருளால், ஒடிசாவுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்கு மீண்டும் கிடைத்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.


ALSO READ: ”திமுக பாதையில் திராவிட சாயலை சாயமாக பூசிக் கொண்டார் விஜய்” - தமிழிசை விமர்சனம்.!!
 
விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளுக்கு பிடிக்காததால் தலைமை நீதிபதி வீட்டில் நடந்த விழாவில் கலந்து கொண்டதை பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்கின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்தார்.  அதிகாரப்பசி உள்ளவர்கள் நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என நினைப்பவர்கள், அதை பொறுக்க முடியாமல் விமர்சிக்கின்றனர் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்ய படைத்தலைவர் குண்டு வைத்து கொலை! உக்ரைன் காரணமா? - ரஷ்யாவில் பரபரப்பு!

நீதிபதி கேட்ட கேள்விக்கு பதில்.. மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞருக்கு ஜாமீன்..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!

சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. பிடிவாரண்ட் பிறப்பித்ததால் உடனடி நடவடிக்கை..!

இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments