நாளை விநாயகர் சதுர்த்தி தமிழக முழுவதும் கொண்டாட இருப்பதை அடுத்து சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்து வரும் நிலையில் சென்னை கோயம்பேடு - மதுரவாயல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம் காரணமாக பேருந்துகள், ரயில்கள் ஆகியவற்றில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்றும் கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களும் அதிகமாக செல்வதால் சென்னை கோயம்பேடு மதுரவாயல் சாலையில் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மணிக்கணக்கில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலையில் போக்குவரத்தை சீர் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை எடுத்து வருகின்றனர்
இதை அடுத்து போக்குவரத்து போலீசார் களத்தில் இறங்கி போக்குவரத்து சீர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கிளம்புவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.