Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (11:11 IST)
முருகேஷ் நிரானி, அரவிந்த் பெல்லத் ஆகிய இருவரில் ஒருவர் முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தகவல். 

 
பாஜகவில் 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்களுக்கு ஓய்வளிக்கப்படும். ஆனால் அப்போதே 76 வயதாகிருந்த எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியது. ஆனால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவி என்ற நிபந்தனையோடு தான் முதல்வர் பதவி வழங்கப்பட்டது. 
 
இந்நிலையில் கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். அமைச்சர் பிரகலாத்ஜோஷி, மாநில அமைச்சர் முருகேஷ் நிரானி, பாஜக பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் எம்.எல்.ஏ. அரவிந்த் பெல்லத் ஆகியோரது பெயர்கள் அடுத்த முதல்வருக்கான தேர்வு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இதில் முருகேஷ் நிரானி, அரவிந்த் பெல்லத் ஆகிய இருவரும் முதல்வர் பதவியில் இருந்து விலகிய எடியூரப்பாவின் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். எனவே இவர்களில் ஒருவர் முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments