Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி துரைசாமியின் நிலை என்ன.? சைதை துரைசாமிடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு..! இன்று டி.என்.ஏ ரிசல்ட்.!!

Senthil Velan
ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (11:14 IST)
இமாச்சல் பிரதேசத்தில் வெற்றி துரைசாமி மாயமான விவகாரத்தில், அவரது பெற்றோரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகிறது.
 
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல் பிரதேசத்தில் விபத்தில் சிக்கினார். அவர் சென்ற கார் சட்லஜ் ஆற்றில் விழுந்தது. இதில் கார் ஓட்டுநர் பலியான நிலையில், வெற்றி துரைசாமியின் நண்பர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். வெற்றி துரைசாமி மாயமான நிலையில், அவரைத் தேடும் பணி தொடர்ந்து 8-வது நாளாக இன்று நீடித்து வருகிறது.
 
சட்லஜ் ஆற்றில் பாறை இடுக்குகளில் கிடைத்த மனிதமூளையின் பாகங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சைதை துரைசாமியின் மகன் வெற்றியுடையதா என்பது குறித்த டி.என்.ஏ ஆய்வு முடிவு இன்று வெளியாகிறது.
 
இதையொட்டி சைதை துரைசாமி மற்றும் அவரது மனைவியிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடைபெறுகிறது.

ALSO READ: பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.! வழக்கறிஞரை தாக்கிய உதவி ஆய்வாளரை கண்டித்து போராட்டம்..!!
 
இரு ரத்த மாதிரிகளையும் ஒப்பிட்டு பார்த்தால்தான் கிடைக்கப்பெற்ற ரத்த மாதிரிகள் யாருடையது என்பது தெரிய வரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுவாச குழாயில் தொற்று; தீவிர சிகிச்சையில் போப் பிரான்சிஸ்! - சிறப்பு பிரார்த்தனை செய்யும் மக்கள்!

அதிமுகவை வெற்றி பெற வைப்பதற்கான ரகசியம் என்னிடம் உள்ளது: ஓபிஎஸ்

காசு கொடுத்தால் சிபிஎஸ்சி தேர்வு வினாத்தாள்கள்? - CBSE விடுத்த எச்சரிக்கை!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மே மாத டிக்கெட் விற்பனை எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு..!

ஒரே நாடு ஒரே தேர்தல்.. உச்சநீதிபதியின் கருத்து கேட்க கூட்டுக்குழு முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments