Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெற்றி துரைசாமியை தேடும் பணி 7 வது நாளாக நீட்டிப்பு.! நாளை டிஎன்ஏ பரிசோதனை முடிவு.!!

Advertiesment
vetri duraisamy

Senthil Velan

, சனி, 10 பிப்ரவரி 2024 (16:46 IST)
இமாச்சலப் பிரதேசம் சட்லஜ் நதியில் காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி 7வது நாளாக தொடர்கிறது.
 
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார்.  அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. 
 
இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமி மாயமான நிலையில் அவரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு 7வது நாளாக ஈடுபட்டுள்ளது. மேலும் வெற்றி துரைசாமியை  கண்டுபிடிக்க  இந்திய கடற்படை களமிறங்கியுள்ளது.

 
இந்நிலையில் கார் விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை தெரியவரும். சட்லஜ் நதி அருகே கண்டறியப்பட்ட மூளை திசுக்களில் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திராவிட_மாடல் அரசு பள்ளிக் கல்வித்துறையின் வளர்ச்சியில் என்றும் துணை நிற்கும்! -அமைச்சர் அன்பில் மகேஷ்