Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பாஜகவுக்கு தாவல்! – மம்தாவுக்கு சிக்கல்!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (17:50 IST)
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளராக நியமிக்கப்பட்டவர் பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பாஜக – திரிணாமூல் காங்கிரஸ் இடையே தேர்தல் குறித்த பெரும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் முன்னதாக 291 தொகுதிகளுக்கான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் அம்மாநிலத்தின் ஹபிப்பூர் தொகுதி திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் சரளா முர்மு. இந்நிலையில் சரளா மர்மூ மற்றும் 4 திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று திடீரென பாஜகவில் இணைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சரளா முர்முவுக்கு பதிலாக ஹபிப்பூர் தொகுதி வேட்பாளராக பிரதீப் பாஸ்கி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments