Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்முறை எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு அல்ல - ராகுல் காந்தி!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (15:09 IST)
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் நலனுக்காக விவசாய எதிர்ப்பு சட்டத்தை திரும்பப் பெறுங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது என்பதும் அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இன்று டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் நாளில் அதே இடத்தில் டிராக்டர்கள் பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்து டிராக்டர் பேரணியை துவங்கினர். தற்போது நிலைமை கைமீறிப் போன நிலையில் போராட்டத்தில் முழு வீச்சில் இறங்கிய விவசாயிகள் டெல்லி முழுவதும் பேரணியாக சென்று டெல்லி செங்கோட்டையின் உச்சியில் விவசாயிகள் தங்கள் விவசாய கொடியை ஏற்றினர். 
 
இதையடுத்து போலீசார் அவர்களை கலைக்களப்புடன் களைந்து செல்ல கூறியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, " வன்முறை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. யாராவது காயமடைந்தால், சேதம் நம் நாட்டுக்கும் நடக்கும். நாட்டின் நலனுக்காக விவசாய எதிர்ப்பு சட்டத்தை திரும்பப் பெறுங்கள் என அவர்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments