தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் திடீரென தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி நேற்று முன்தினம் தமிழகத்துக்கு வருகை தந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். கோவை ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் கடந்த மூன்று நாள்களாக பிரச்சாரம் செய்த நிலையில் இன்று அவர் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார்
இந்த பிரசாரத்தின் போது முதல் இரண்டு நாட்கள் அவர் கூட்டணி குறித்து எதுவும் பேசாமல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே வாக்கு கேட்டார். இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் முதல்வர் வேட்பாளராக வருவதற்கு காங்கிரஸ் பாடுபடும் என்று அவர் கூறி கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டினார்
மேலும் முதல்கட்ட பிரசாரத்தை முடித்துவிட்ட ராகுல் காந்தி மீண்டும் வெகு விரை தமிழகத்திற்கு அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது