Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதற்கு மேல் என்னால் போராட முடியாது.. ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்..!

Siva
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (07:12 IST)
மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார். மல்யுத்தம் என்னை வீழ்த்திவிட்டதாக வினேஷ் போகத் வேதனையுடன் பதிவு செய்த நிலையில் இதற்கு மேல் போராட தன்னிடம் பலம் இல்லை என உருக்கமாக கூறியுள்ளார். 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘என்னை மன்னியுங்கள் அம்மா,  மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது, நான் தோற்றுவிட்டேன்.  உங்கள் கனவுகளும் என் தைரியமும் உடைந்துவிட்டது. இனியும் சண்டையிட எனக்கு வலிமை இல்லை எனவும் கூறியுள்ளார்.
 
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில் இன்று இது குறித்த விசாரணை நடைபெற உள்ளது. இந்த நிலையில் திடீரென வினேஷ் போகத் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
முன்னதாக 50 கிலோ எடை பிரிவில் வினேஷ் போகத் விளையாடி அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், போட்டிக்கு பின்னர் அவர் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 12 முதல் கனமழை சூடு பிடிக்கும்.. சென்னை மக்கள் ஜாக்கிரதை: தமிழ்நாடு வெதர்மேன்..!

நீட் பயிற்சி மாணவியை 6 மாதமாக பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை..2 ஆசிரியர்கள் கைது!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! 7 நாட்களுக்கு கனமழை..!

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments