Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் பெரியாரிஸ்டுகளுக்கும் இந்துத்துவ வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்: எச்.ராஜா டுவீட்

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (22:58 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக அளித்த ஒரு ராஜ்யசபா தொகுதியின் மூலம் சமீபத்தில் ராஜ்யசபா எம்பியாக தேர்வானார் என்பதும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்றார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் வைகோ டெல்லியில் முக்கிய பிரமுகர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார். சுப்பிரமணியன் சாமி, எல்கே அத்வானி உள்பட பல பிரமுகர்களை வைகோ சந்தித்த நிலையில், சற்றுமுன் அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
 
 
பிரதமரை நேரில் சந்தித்து வைகோ, அவருக்கு பொன்னாடை போர்த்தி இன்முகத்துடன் சிரித்தபடியே புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் பிரதமருடன் வைகோ எடுத்த இந்தப் புகைப்படம் குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியதாவது:
 
 
தமிழகத்திற்கு பிரதமர் வந்த போது "கோ பேக் மோடி" என்று கருப்பு பலூன் விட்டனர்.  அதே நபர்கள் பிரதமரை சந்திக்கும் போது இன்முகத்துடன் வரவேற்றுள்ளார் பிரதமர். இதுதான் பெரியாரிஸ்டுகளுக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்று ராஜா கூறியுள்ளார்.
 
 
எச்.ராஜாவின் இந்த பதிவிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் அடங்கிய கமெண்ட்டுகள் பதிவாகி வருகிறது. மேலும் தொடர்ச்சியாக சுப்பிரமணியம் சுவாமி, அத்வானி, மோடி என பாஜக தலைவர்களை மட்டுமே வைகோ சந்தித்து வருவது காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் மத்தியில் புகைச்சல் ஏற்படுத்தி உள்ளதாக ஒருவர் கமெண்ட் அடித்துள்ளார். வைகோ பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருவது அடிப்படை அரசியல் நாகரீகம் என்றும் இதனை அரசியலோடு ஒப்பிடக் கூடாது என்றும் இன்னொருவர் கருத்து தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கடவுள் எப்போதும் அரசியலில் ஈடுபட மாட்டார்.. மோடி குறித்து மம்தா பானர்ஜி பேச்சு..!

தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

கேரளாவில் 24 மணி நேரத்தில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!

மதவெறி கொண்ட யானையை விட, மதவெறி பிடித்துள்ள பாஜக ஆபத்தானது..ஜெயக்குமார்

மோடி வருகை எதிரொலி..! 42 மீனவ கிராமங்களில் போலீசார் குவிப்பு - உச்சகட்ட பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments