உத்தரகாசி நிலச்சரிவு: காணாமல் போன 10 ராணுவ வீரர்கள்.. தேடும் பணி தீவிரம்

Siva
புதன், 6 ஆகஸ்ட் 2025 (07:48 IST)
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில், மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, சுமார் 10 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரகாசியின் தராலி கிராமம் மற்றும் அதன் அருகிலுள்ள ஹர்சில் ராணுவ முகாம் அருகே மேக வெடிப்பு ஏற்பட்டது.இந்த மேக வெடிப்பு காரணமாக, கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் மட்டுமின்றி ராணுவ முகாம் பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
 
வெள்ளத்தில் 10 ராணுவ வீரர்கள் சிக்கி காணாமல் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ முகாம் பாதிக்கப்பட்ட நிலையிலும், ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை  மற்றும் காவல்துறை குழுக்களும் இணைந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
 
ஏற்கனவே, இந்த நிலச்சரிவில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ராணுவ வீரர்களின் நிலை என்ன ஆனது என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments