உத்தரகாண்டில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் இந்த கொடூர விபத்தின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள ஹர்சில் பகுதியில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பை தொடர்ந்த வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தராலி கிராமத்தில் பிற்பகல் 1.45 மணியளவில் மேகவெடிப்பால் மலையிலிருந்து பெரும் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகளையும், ஏராளமான மக்களையும் அடித்துச் செல்லும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பெரும் அசம்பாவிதத்தை தொடர்ந்து இந்திய ராணுவ மீட்பு படைகள் உத்தரகாண்ட் நோக்கி விரைந்துள்ளன. ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் உயிர்பலி அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.