Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுவனை வன்கொடுமை செய்து எயிட்ஸை பரப்பிய பெண்! – உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

சிறுவனை வன்கொடுமை செய்து எயிட்ஸை பரப்பிய பெண்! – உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!
, வியாழன், 7 ஏப்ரல் 2022 (10:52 IST)
தனக்கு எயிட்ஸ் தொற்று உருவாக காரணமாக இருந்த கணவரின் குடும்பத்தினரை பழி வாங்க பெண் செய்த செயல் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் பிலிபித் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. அவள் கணவருக்கு எயிட்ஸ் பாதிப்பு இருப்பதை மறைத்து அவருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவனுடனான உறவால் இளம்பெண்ணுக்கும் எயிட்ஸ் பரவியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் எயிட்ஸ் காரணமாக இளம்பெண்ணின் கணவர் இறந்துள்ளார். இதற்கு காரணமான கணவனின் அண்ணன் குடும்பத்தை பழிவாங்க துடித்த இளம்பெண், கணவனின் அண்ணன் மகனான 15 வயது சிறுவனை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுவன் பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் இளம்பெண்ணை கைது செய்து விசாரித்தபோது எயிட்ஸை பரப்பி அவர்கள் குடும்பத்தை பழிவாங்க திட்டமிட்டதாக கூறியுள்ளார். தற்போது சிறுவனுக்கு எயிட்ஸ் தொற்று உள்ளதாக என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'எக்ஸ்இ’ ரக வைரஸ் குறித்த பதற்றம் வேண்டாம் - ராதாகிருஷ்ணன்!