Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஜா கெட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து! யூபிஎஸ்சி அதிரடி அறிவிப்பு..!

Mahendran
புதன், 31 ஜூலை 2024 (17:05 IST)
ஐஏஎஸ் பயிற்சி பெற்ற பூஜா கெட்கர்,  ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து என்று அதிரடியாக யூபிஎஸ்சி அறிவித்துள்ளது.
 
பூஜா கெட்கர் முறைகேடு செய்து ஐஏஎஸ் தேர்வு எழுதியது நிரூபணம் ஆகி உள்ளதை அடுத்து பயிற்சி அதிகாரியாக இருந்த அவரது ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்து யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
மேலும் இனி அவர் யுபிஎஸ்சி தேர்வு எழுத முடியாதபடி வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் முறை தேர்வு எழுதி அவர் தேர்ச்சி பெற்று இருப்பதும் தெரியவந்துள்ளது. அதற்காக தனது பெயர் பெற்றோரின் பெயரை மாற்றி ஆவணங்கள் சமர்ப்பித்ததும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
 
அதுமட்டுமின்றி பயிற்சியில் இருந்தபோது அவர் துணை கலெக்டராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் கலெக்டரின் அதிகாரங்களை அவர் தன்னிச்சையாக எடுத்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
 
மேலும் அவரது தந்தையின் வருமானமும் குறைத்து காட்டப்பட்டிருந்த மோசடியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவரது ஐஏஎஸ் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவதில் மீண்டும் சிக்கல்! ராக்கெட் பழுது..!

இன்று பெளர்ணமி தினம்.. திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்..!

1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை.. முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை விவரங்கள்..!

முதல்வர் பினராயி விஜயனுடன் சசி தரூர் எடுத்த செல்பி: காங்கிரஸ் ரியாக்சன்..!

நிர்மலா சீதாராமனின் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. விஜய் கண்டன அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments