Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கற்பழிக்க முயன்ற உறவினரின் ஆணுறுப்பை வெட்டி எறிந்த இளம்பெண்

கற்பழிக்க முயன்ற உறவினரின் ஆணுறுப்பை வெட்டி எறிந்த இளம்பெண்
, புதன், 2 மே 2018 (14:24 IST)
உபி மாநிலத்தில் நெருங்கிய உறவினர் ஒருவர், பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண், அவருடைய ஆணுறுப்பை வெட்டி எறிந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள துர்காபூர் என்ற கிராமத்தில் மனோஜ்குமார் என்ற இளைஞர் தன்னுடைய வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்த இளம்பெண்ணை நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், இதனையறிந்த அந்த இளம்பெண் அருகே இருந்த கத்தியை எடுத்து மனோஜ்குமாரின் ஆணுறுப்பை வெட்டி எரிந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மனோஜ்குமாரை மருத்துவமனையில் சேர்த்து அவரிடம் விசாரணை செய்து கொண்டு வருகின்றானர். பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டம் இயற்றப்பட்டும் பாலியல் குற்றங்கள் குறையாமல் இருப்பதால் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யூத இனப்படுகொலை: பாலத்தீன தலைவரின் புதிய விளக்கத்தால் சர்ச்சை