டெல்லி அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள்: மணிஷ் சிசோடியாவுக்கு பதில் யார்?
டெல்லியில் சமீபத்தில் துணை முதலமைச்சர் ஆக இருந்த மணிஷ் சிசோடியா உள்பட இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் அவர்களுக்கு பதிலாக தற்போது இரண்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்று உள்ளனர்.
டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் மணிஷ் சிசோடியா மற்றும் அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் ஆகிய இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்த நிலையில் டெல்லி அமைச்சரவையில் சவுரவ் பரத் ராஜ் மற்றும் அதிசி ஆகியோர் இன்று ஆளுநர் முன்னிலையில் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். அதிசி கல்வித்துறை அமைச்சர் ஆகவும் சவுரவ் பரத் ராஜ் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகவும் பதவியேற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.