Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த 2 பக்தர்கள் உயிரிழப்பு.. கூட்ட நெரிசல் காரணமா?

Siva
செவ்வாய், 28 ஜனவரி 2025 (09:34 IST)
அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இரண்டு பக்தர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து அங்குள்ள குழந்தை ராமர் கோவிலில் தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் கடந்த சில நாட்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவரும் அவருடன் ஒரு பெண்ணும் அயோத்தி ராமர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்தனர்.

அப்போது திடீரென இருவரும் மயங்கி விழுந்த நிலையில் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கூட்ட நெரிசல் காரணமாக இருவரும் இடிபாடுகளில் சிக்கி இறந்ததாக சமூக ஊடகங்களை தகவல்கள் பரவிய நிலையில் இதனை போலீசார் மறுத்துள்ளனர்.

இருவருக்கும் அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக தான் அவர்கள் இறந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்பிற்கான காரணம் முழுமையாக தெரியவரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

அயோத்தி ராமர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இரண்டு முதியவர்கள் திடீரென இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments