Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ட்ரம்ப் சஸ்பென்சாய் வைத்திருந்த ஒப்பந்தம் இதுதான்! – 20 ஆயிரம் கோடி திட்டம்!

Advertiesment
ட்ரம்ப் சஸ்பென்சாய் வைத்திருந்த ஒப்பந்தம் இதுதான்! – 20 ஆயிரம் கோடி திட்டம்!
, திங்கள், 24 பிப்ரவரி 2020 (14:48 IST)
இந்திய பயணத்தின் போது முக்கியமான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக சஸ்பென்ஸ் செய்து வந்த ட்ரம்ப் அது என்ன ஒப்பந்தம் என கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டுநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று முற்பகல் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த ட்ரம்ப்பை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். பிறகு இருவரும் காந்தியின் ஆசிரமத்தை பார்வையிட்ட பிறகு “நமஸ்தே ட்ரம்ப்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

மேடையில் நமஸ்தே என்று கூறி பேச்சை தொடங்கிய அதிபர் ட்ரம்ப் இந்தியாவுடனான அமெரிக்காவின் நட்பு, மோடியின் ஆட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் ஆகியவை குறித்து மிகவும் புகழ்ந்து பேசினார். முன்னதாக இந்தியா வரும் முன்னரே முக்கியமான ஒரு ஒப்பந்தத்தை இந்தியாவோடு கையெழுத்திட இருப்பதாக சஸ்பென்ஸ் வைத்தார் ட்ரம்ப்.

மேடையில் பேசிய ட்ரம்ப் இந்தியாவின் பாதுகாப்புத் துறையோடு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை அமெரிக்காவிடம் இந்தியா வாங்க இருப்பதாக தெரிகிறது. இன்று சுற்றுப்பயணம் செல்லும் ட்ராம்ப் நாளை டெல்லியில் பிரதமருடன் இதுகுறித்த ஒப்பந்தங்களை புரிவார் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காட்டை காக்க மரணம் வரை போராடுவோம்: அமேசான் ஆதிக்குடி பெண்கள் போராட்டம்!