Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறப்பு தரிசனத்திற்கு மட்டும் அனுமதியா? – திருப்பதில் பக்தர்கள் போராட்டம்!

Advertiesment
சிறப்பு தரிசனத்திற்கு மட்டும் அனுமதியா? – திருப்பதில் பக்தர்கள் போராட்டம்!
, செவ்வாய், 22 டிசம்பர் 2020 (10:03 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்காததை கண்டித்து பக்தர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கொரோனா காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில் தேவஸ்தான அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டதால் பரபரப்பு எழுந்தது.

தற்போது மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் வர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது வீரியமிக்க கொரோனா பரவும் அபாயமும் உள்ளதால் ஜனவரி 3 வரை திருப்பதியில் இலவச தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டு சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏமாற்றமடைந்த இலவச தரிசன பக்தர்கள் பலர் திருப்பதியின் சாலைகளில் அமர்ந்து போராட்டம் செய்ய தொடங்கியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 19,556 பேருக்கு கொரோனா !!