Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு மாற்று ராகுல் இல்லை; மம்தாதான் – திரிணாமூல் காங்கிரஸ் எம்பி பேச்சு!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (10:09 IST)
மோடியை எதிர்க்கும் தலைவராக ராகுல் காந்தி தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி ஒருவர் பேசியுள்ளார்.

நாடு முழுவதும் பாஜக எதிர்ப்பு அலை இப்போது உருவாகி வருகிறது. ஆனால் பாஜகவை வெல்லும் பலம் இப்போது எதிர்க்கட்சியான காங்கிரஸிடம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. அதனால் 2024 ஆம் ஆண்டு தேர்தலைக் கணக்கில் கொண்டு எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணி பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர்.

இதில் மம்தா பானர்ஜி மோடி எதிர்ப்பில் முன்னணியில் உள்ளார். பாஜக எதிர்ப்பு முதல்வர்களை அவர் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார். சமீபத்தில் நடந்த மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார்.

இந்நிலையில் அக்கட்சியின் எம்பியான சுதீப் பந்தோபாத்யாய ‘மம்தா தான் எதிர்க்கட்சிகளின் முகமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோன்ம். நான் நீண்டகாலமாக கவனித்த வரையில் ராகுல் காந்தி மோடிக்கு மாற்றான தலைவராக தன்னை மேம்படுத்திக் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவும் மம்தாவை விரும்புகிறது. நாங்கள் அவரை மையப்படுத்தியே பிரச்சாரம் செய்வோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

கன்னிமாரா நுாலகத்தை, 'கொன்னமர நுாலகம்' என மொழி பெயர்த்த கூகுள்: தமிழ் ஆர்வலர்கள் கண்டனம்..!

அடுத்த தேர்தலில் கனடா பிரதமர் தோல்வி அடைவார்: எலான் மஸ்க் கணிப்பு..!

2026 கூட்டணி ஆட்சியில் நாங்கள் இருப்போம்.. விஜய் உடன் கூட்டணியா? அன்புமணி பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments