விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள அனபெல் சேதுபதி திரைப்படம் நேற்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.
கொரோனா முதல் லாக்டவுனுக்குப் பிறகு விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் டாப்ஸி ஆகியோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படத்தின் பெயர் அனபெல் சுப்ரமண்யம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அனபெல் சேதுபதி என மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்து விட்ட நிலையில் ரிலிஸாகாமல் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில் இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக நேற்று வெளியாகியது.
படம் நெகட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் அதை விட பெரிய ஏமாற்றமாக படத்தில் விஜய் சேதுபது முதல் பாதிக்குப் பின்தான் வருகிறாராம். கிட்டத்தட்ட கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள படத்தை அவரே கதாநாயகனாக நடித்துள்ளது போல விளம்பரம் செய்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.