Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் முதலமைச்சருடன் டி.ஆர்.பாலு சந்திப்பு.. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து ஆலோசனை..!

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (13:50 IST)
பீகார் முதலமைச்சருடன் டி.ஆர்.பாலு சந்திப்பு.. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து ஆலோசனை..!
புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கிளப்பப்பட்டு வரும் வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாத்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அவர்களை சந்தித்த திமுக எம்பி டிஆர் பாலு புலம்பெயர் தொழிலாளர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். 
 
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பாட்னா சென்று நிதீஷ் குமார் அவர்களை டிஆர் பாலு சந்தித்துள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்றும் தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மசோதா நிறைவேறினால் வக்பு நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்

இன்று வக்பு வாரிய மசோதா: ராகுல் காந்தி தலைமையில் அவசர ஆலோசனை..!

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது? அதனால் என்ன பயன்? தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments