Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சில மணி நேரங்களில் நீட் தேர்வு முடிவுகள்: எப்படி பார்க்கலாம்?

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (07:56 IST)
இன்னும் சில மணி நேரங்களில் நீட் தேர்வு முடிவுகள்
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 13ம் தேதி நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரபரப்பிலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தபோதிலும், மத்திய அரசு இந்த தேர்வை விடாப்பிடியாக நடத்தியது 
 
இந்த நிலையில் சுமார் 13 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகும் என தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது. இன்னும் சில மணிநேரங்களில் வெளியாக இருக்கும் இந்த தேர்வு முடிவை nta.ac.in மற்றும் ntaneet.nic.in  ஆகிய இணையதளத்தில் சென்று மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
3,862 மையங்களில் நடந்த இந்த தேர்வை நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 13 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வை எழுதியிருந்தனர் என்பதும், தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments