தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கேரளாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்து வரும் நிலையில் அங்கு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கு இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
அந்தவகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்றும் இதனால் பொது மக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
காய்கறி மறந்து பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் திறந்திருக்கும் என்றும் அவசரப் பணிக்கு செல்வோர் தக்க ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கேட்கும் போது அதனை காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
அதேபோல் தேர்வுகளில் பங்கேற்பவர்கள் ஹால் டிக்கெட்டை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக ஒரு சில பேருந்துகள் மட்டும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது