Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் பலி

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (11:45 IST)
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த 14 வருடமாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவின் குரேஸ் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் பனிப்பாறைகள் சரிந்து சோதனை சாவடி முழுதும் மூடப்பட்டது. அதில் பாதுகாப்பு பணியில் இருந்த  தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விமானம் மூலம் அவரது உடல் தமிழகத்தை வந்தடைகிறது. பின் அவரது சொந்த ஊரில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10, 11 ஆம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

SSLC ரிசல்ட்டிலும் அறிவியல் முதலிடம்.. தமிழ் கடைசி இடம்! - ஆச்சர்யம் அளிக்கும் செண்டம் பட்டியல்!

திட்டமிட்ட நாளில் பள்ளிகள் திறக்கும்.. எந்த மாற்றமும் இல்லை! - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!

நீரவ் மோடி ஜாமின் மனு 10வது முறையாக தள்ளுபடி: லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

ஜீன்ஸ் போட்டக் காதலியை கழுத்தை நெறித்துக் கொன்ற ‘கலாச்சார’ காதலன்! - நீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments