Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதி ஏழுமலையான்கோயிலின் தங்கம், நிதி இருப்பு விவரம் வெளியீடு!

Advertiesment
tirupathi
, சனி, 5 நவம்பர் 2022 (15:58 IST)
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருமலையில் ஏழுமலையான் கோயில் உள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்து ஏழுமலையான் சுவாமியை தரிசித்துச் செல்லுகின்றனர்.

நேற்று முன் தினம் 20 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம் ஆகியவற்றை காண்க்கை செலுத்தி வருகின்றனர்.

இந்த  நிலையில், இக்கோயிலில் உள்ள தங்கம், நிதி ஆகிய இருப்பு பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில்,  திருமலை திருப்பதி தேவஸ்தானம் வங்கிகளில்  ரூ.16 ஆயிரம் கோடியை டெபாசிட் செய்துள்ளதாகவும்,வங்கிகளில் தங்க முதலீட்டுத் திட்டத்தில் 10 டன் தங்கத்தை டெபாசிட் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலில் போட்டியிடாமல் இருக்க பாஜக பேரம் நடத்தியது- முதல்வர் கெஜ்ரிவால் தகவல்