Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு வருமானம் இத்துணை கோடியா !

Advertiesment
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு வருமானம் இத்துணை கோடியா !
, வெள்ளி, 3 ஜனவரி 2020 (13:48 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2010 ஆண்டில் உண்டியலில் ஈட்டிய வருமானம் ரூ.1161 ரூபாய்க்கு மேல் காணிக்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் உள்ள செல்வாக்கு மிக்க கோவிலாகத் திகழ்வது  திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்கு தினம்தோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் சுவாமியைத் தரிசனம் செய்து வருகின்றனர்.
 
இநிநிலையில், கடந்த ஆண்டு (2019) திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  2,78 ,90, 179 பக்தர்கள் சுவாமி தரிசணம் செய்துள்ளனர் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
மேலும், பக்தர்கள் அளித்த காணிக்கை மூலம் ரூ.1,161 கோடியே 74 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
 
அதேபோல்,கடந்த ஆண்டு மொத்தம் 12, 49, 80, 815 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லேட்டா வந்தாலும் லேடஸ்ட்டாய் வெளிவரும் ஹானர்!!