Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணக்கார கடவுளுக்கே இந்த நிலமையா? - வங்கி பணத்தை எடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

Advertiesment
பணக்கார கடவுளுக்கே இந்த நிலமையா?  - வங்கி பணத்தை எடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு!
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (10:49 IST)
கொரோனா காரணமாக திருப்பதி கோவிலில் வருமானம் இல்லாத நிலையில் வங்கி பணத்தை எடுக்க தேவஸ்தானம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இந்து மத கடவுள்களிலேயே குபேரனுக்கு பிறகு மிகப்பெரும் செல்வந்த கடவுளாக வணங்கப்படுவர் திருப்பதி வெங்கடாஜலபதி. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கும் திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் நன்கொடையாக அளிக்கும் தொகை அதிகம் என்பதால் நிர்வாக செலவுகள் போக எஞ்சிய தொகை வங்கியில் இருப்பு வைக்கப்பட்டது.

ஆனால் சமீப காலமாக கொரோனா காரணமாக திருப்பதி தேவஸ்தானம் மூடப்பட்டிருப்பதாலும், பக்தர்கள் வருகை இல்லாததாலும் வருமானம் மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில் நிர்வாக செலவுகள் மற்றும் கோவில் பணிகளுக்கு வங்கியில் உள்ள இருப்புத்தொகையை எடுப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெட்டிய சித்தப்பா தலையோடு சரணடைந்த கொலையாளிகள்! – சிவகங்கையில் பரபரப்பு!