Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் கடைசி முயற்சி.! போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புக.! மருத்துவர்களுடன் மம்தா பேச்சுவார்த்தை..!!

Senthil Velan
சனி, 14 செப்டம்பர் 2024 (15:57 IST)
கொல்கத்தாவில் போராட்டம் நடத்தும் மருத்துவர்களை நேரில் சந்தித்து உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார். 
 
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவ மாணவி, கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு மேற்குவங்க பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
 
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அண்மையில் மம்தா பானர்ஜி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பேச்சுவார்த்தையை மருத்துவர்கள் குழு புறக்கணித்தது. இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களை  முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சந்தித்து பேசினார்.

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றும் உறுதியளித்தார். போராட்டம் நடத்திய மருத்துவர்களை சமாதானப்படுத்த தான் மேற்கொண்ட கடைசி முயற்சி இது என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.


ALSO READ: ஜம்மு காஷ்மீரில் பிரதமர் சூறாவளி பிரச்சாரம்.! விவசாயிகளுக்கான நிதி உதவி தொகை ரூ.10,000-ஆக உயர்த்தப்படும் என உறுதி.!!!
 
முதல்வரின் வருகையை வரவேற்ற பயிற்சி மருத்துவர்கள், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினர். இருப்பினும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று மருத்துவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்