Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது!

Webdunia
சனி, 27 மே 2023 (18:00 IST)
புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
 

மத்தியில் பிரதமர் மோடி  தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ''புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாக''வும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். ''இந்த செங்கோல் நாடு சுதந்திரம் அடைந்தபோது முன்னாள் பிரதமர் நேருவுக்கு திருவாடுதுறை ஆதினம் வழங்கிய செங்கோல் எனவும், இது  நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் இருக்கை முன் நிறுவப்பட உள்ளதாகவும்' அமித்ஷா கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்துமோதல்கள் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் நேற்று திருவாடுதுறை ஆதினம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் இன்று  டெல்லிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பிரயாக்ராஜில் முக்கூடலில் சிறப்பு வழிபாடு நடத்திய பின் தனி விமானத்தில் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டது.  டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட பின் செங்கோல் மத்திய கலாசார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
புதிய பாராளுமன்றக் கட்டிடம் நாளை திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments