Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 8 April 2025
webdunia

இந்தியா வாங்களேன்.. தீபாவளி கொண்டாடலாம்! – ஆஸ்திரேலிய பிரதமருக்கு அழைப்பு!

Advertiesment
PM Modi
, புதன், 24 மே 2023 (09:32 IST)
ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமரை இந்தியாவிற்கு தீபாவளி கொண்டாட வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜி20 மாநாட்டிற்காக ஜப்பான் சென்ற இந்திய பிரதமர் மோடி அங்கிருந்து பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்தார். அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் அங்கு நடைபெற்ற ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்பங்கேற்றார். அவருடன் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் இருந்தார்.

பின்னர் இருவரும் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய பிரதமர் மோடி “இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உறவு இருநாட்டு கிரிக்கெட் அணிகளின் டி20 போட்டி போல வலுவாக உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிகளை காண ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் அந்த சமயத்தில் இந்தியா வந்தால் இந்தியாவின் பிரபலமான தீபாவளி கொண்டாட்டத்திலு, பங்கேற்கலாம்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதவிட கம்மியான ரேஞ்ச்ல போனே இல்ல! – அசர வைத்த Redmi A2!