Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

'இந்தியா' கூட்டணியின் புதிய லோகோ ! வெளியான தகவல்

Advertiesment
india alliance
, புதன், 30 ஆகஸ்ட் 2023 (14:48 IST)
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள்  இணைந்துள்ள ‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் மும்பையில் கூட்டம் நடைபெறவுள்ளது.

வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள  நிலையில், இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

ஏற்கனவே தொடர்ந்து இரண்டுமுறை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற கூட்டணி வியூகங்களை வகுத்து வருகிறது.

அதேபோல் இரண்டு முறை தோல்வியுற்ற காங்கிரஸ் கட்சியும் தங்களின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் சமீபத்தில் 16 கட்சிகளை ஒன்றிணைந்து தங்கள் அணிக்கு என்ற  இந்தியா என்ற பெயரிட்டுள்ளது.

இதில், காங்கிரஸ், திமுக,  ஐக்கிய ஜனத தளம், திரிணாமுல் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இக்கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. 2 வது கூட்டம் பெங்களூரில் நடைபெற்றபோது, இக்கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரிடப்பட்டது. 3 வது கூட்டம் மும்பையில்  நாளை மற்றும் நாளை மறு நாள் நடைபெறவுள்ளது. இதில், 16 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மும்பையில் இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கவுள்ளதாகவும், செப்டம்பர் 1 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு இக்கூட்டணியின் லோகோ வெளியிடப்பட உள்ளதாகவும், செப்டம்பர் 1 ஆம் தேதி 3.30 மணிக்கு இந்தியா கூட்டணி சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்ட் 23 -தேசிய விண்வெளி தினம்: அமைச்சரவை வரவேற்கிறது- பிரதமர் மோடி