Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம்: மும்பையில் இன்று திறப்பு!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (08:07 IST)
இந்தியாவின் முதல் நேரடி ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை நிலையம் இன்று திறக்கப்படுவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் எலக்ட்ரானிக் பொருள்கள் ஆகியவை உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் இதனை ஆன்லைன் மூலம் மட்டுமே பெற்று வருகின்றனர். 
 
இந்த நிலையில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என பிரத்யேக ஷோ ரூம் இல்லாத நிலையில் மும்பையில் ஆப்பிள் விற்பனை நிலையம் தொடங்க திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் மும்பையில் திறக்கப்பட உள்ள ரீடைல் ஸ்டோரின் வெளித்தோற்றத்தையும் தனது இணையதளத்தில் ஆப்பிள் நிறுவனம் பகிர்ந்தது. 
 
இந்த நிலையில் இந்தியாவின் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையம் மும்பையில் இன்று திறக்கப்படுகிறது. இந்த விற்பனை நிலையத்திற்கு ஆப்பிள் பிகேசி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் பங்கேற்க ஆப்பிள் சிஇஓ டிம்குக் இந்தியா வந்துள்ளார் என்பதும் ஏப்ரல் 25ஆம் தேதி இரண்டாவது விற்பனை நிலையம் டெல்லியில் திறக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments