Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை நேரில் சந்தித்த ''தி கேரளா ஸ்டோரி'' படக்குழுவினர்

Webdunia
புதன், 10 மே 2023 (21:55 IST)
தி கேரளா ஸ்டோரி படக்குழுவினர் இன்று லக்னோவில் முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை  நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

பாலிவுட்டில் தயாரான தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் கடந்த  மே 5  மாதம்  ஆம் தேதி  வெளியானது என்பதும் இந்த படம் தமிழ்நாடு கேரளா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அமைப்புகளால் எதிர்ப்பு ஏற்பட்டதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை திரையிடவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் அதே நேரத்தில் கேரளாவில் இன்னும் இந்த படம் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு  முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு தடைவிதித்துள்ளது. இதை எதிர்த்து,தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு விசாரணை வரும் 12 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இதற்கிடையே,  உத்தரபிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு அறிவிக்கவுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்ய நாத்  கூறினார்.

இதையடுத்து, தி கேரளா ஸ்டோரி படக்குழுவினர் இன்று லக்னோவில் முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை  நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments