Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து விபத்து

Webdunia
புதன், 10 மே 2023 (20:09 IST)
கேரளாவில் மீண்டும் செல்போன் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று செல்போனில் சார்ஜ் செய்துகொண்டே பேசிய  இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானார். சில நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலத்தில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி ஒருவர் செல்போன் வெடித்து பலியானார்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செல்போன் தற்போது மக்களுக்கு முக்கியத் தேவை என்றாலும் அதில் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை மேற்கண்ட செய்திகளின் மூலம் அறியமுடிகிறது.

இந்த    நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது, கேரளாவைச் சேர்ந்தவர் ஹரிஸ் ரகுமான்(23). இவர் கோழிக்கோட்டில் உள்ள தன் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு தன் ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் வைத்திருந்தார்.

அப்போது, திடீரென்று செல்போன் வெடித்துச் சிதறியது. அவது ஜீன்ஸிலும் தீப்பிடித்ததால், அருகில் ரகுமான் உடனடியாக தீயை அணைத்துவிட்டார்.  இவ்விபத்தில் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்ட செல்போன் 2 ஆண்டிற்கு முன்பு வாங்கியதாக கூறியுள்ள அவர் தீக்காயத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments