Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாயைக் கொன்று தந்தையின் ஆவியுடன் பேச முயன்ற பிரபல 'பெண் மாடல் ...'

தாயைக் கொன்று தந்தையின் ஆவியுடன் பேச முயன்ற பிரபல  'பெண் மாடல் ...'
, திங்கள், 8 அக்டோபர் 2018 (13:07 IST)
இந்தியாவின் மான்செஸ்டரான மும்பையில் உள்ள அந்தேரியில் லோகந்த்வாலா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் லக்சயாசிங் (23) என்ற மாடல் நடிகை  அவரது தாய் சுனிதா சிங்குடன் (49) வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பிரபல பேஷன் டிசைனர் ஆவார். அவருடைய கணவர் இறந்து சில வருடங்கள் ஆகிறது. 

லக்சயா சிங்கிற்கும் ,அவரது தால் சுனிதா சிங்கிற்கும் போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி வழக்கம்போல வீட்டுக்கு வந்தலக்சயா தன்னுடன் நண்பர் நிகில்ராய் மற்றும் தோழி ஆஷ்பிரியாவையும் அழைத்துவந்துள்ளார்.

அப்போது தாயுடன் வாய்த்தகறாரு முற்றிவிடவே ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த லக்சயா தன் தாயை அடித்து வலுக்கட்டாயமாக குளியலறையில் தள்ளி கதவை தாழிட்டுள்ளார்.
பிறகு நண்பர்களுடன் வெளியே கிளம்பிய லக்சயா சிறிது நேரம் கழித்து வந்து வந்து பார்த்த போது தன் தாய் இறந்துட கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிந்ததும் லக்சயாவை பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது அவர் கூறியதாவது:

”நான் எவ்வித திட்டமிட்டும் என் தாயை கொலை செய்யவில்லை. அவருக்குள் இருந்த என் அப்பாவின் ஆவியை வெளியே கொண்டு வருவதற்குதான்  முயற்சி செய்தேன் ” இப்படி அவர் கூறிய பதில் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இக்கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட  லக்சயாவுக்கு வரும் அக்டோபர் 8ஆம்தேதி வரை போலீஸ் காவல் நீட்டிக்கப்படுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவியை பலாத்காரம் செய்து வீடியோவை பரப்பிய வாலிபர் - கடலூரில் அதிர்ச்சி