Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியுடன் சண்டை! மாமியார் வீட்டுக்கு போக பேருந்தை கடத்திய டிரைவர்! - ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick
ஞாயிறு, 28 ஜூலை 2024 (10:18 IST)

ஆந்திராவில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் தனது மாமியார் வீட்டிற்கு செல்வதற்காக அரசு பேருந்தை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ஆந்திர பிரதேசத்தில் உள்ள வேங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துர்க்கையா. இவர் டிரைவராக பணிபுரிந்து வந்த நிலையில் இவருக்கு திருமணமாகி மனைவி ஒருவரும் உள்ளார். கடந்த சில நாட்களிக்கு முன்னர் துர்க்கையாவின் மனைவி அவரிடம் சண்டை போட்டுக் கொண்டு தனது அம்மாவின் ஊரான நந்தியால் மாவட்டத்தில் உள்ள முச்சுமர்ரிக்கு சென்றுள்ளார்.

 

இதனால் மனதளவில் பாதிப்படைந்த துர்க்கையா தனது மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை பார்க்க எண்ணியுள்ளார். ஆனால் அதற்கு கையில் பணம் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஆத்மகுரு பேருந்து நிலையம் சென்றவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து ஒன்றை எடுத்துக் கொண்டு முச்சுமர்ரிக்கு புறப்பட்டுள்ளார்.

 

பயணிகள் யாருமில்லாமல் தனியாக அரசு பேருந்து செல்வதை பார்த்த போலீஸார் சந்தேகமடைந்து பேருந்தை வழிமறித்து விசாரித்ததில் துர்க்கையா பேருந்தை கடத்திக் கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து பேருந்தை பறிமுதல் செய்த போலீஸார் துர்க்கையாவையும் பிடித்து வைத்துக் கொண்டு அவரது வீட்டாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

பின்னர் அங்கு வந்த துர்க்கையாவின் உறவினர்கள், அவருக்கு மனநலம் சரியில்லை என்று சொன்னதையடுத்து அவர் மேல் வழக்கு பதியாமல் அவரை அனுப்பி வைத்துள்ளனர். மாமியார் வீட்டுக்கு செல்ல அரசு பேருந்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments