Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப் தான் அடுத்த அதிபர்.. ஜோ பைடன் விலகுவதை கணித்த ஜோதிடர் அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 28 ஜூலை 2024 (10:08 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகி விடுவார் என்று முன்பே கணித்த ஜோதிடர் தற்போது டொனால்ட் டிரம்ப் தான் அடுத்த அமெரிக்க அதிபர் என்று கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் முதலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் மோதுவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களாக ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகிய நிலையில் தற்போது கமலா ஹாரிஸ்  அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவார் என்பதை கடந்த சில வாரங்களுக்கு முன்பே கணித்த ஏமி ட்ரிப் என்ற அமெரிக்க ஜோதிடர் தற்போது டொனால்ட் டிரம்ப் அடுத்த அதிபராக பதவி ஏற்பார் என்று கணித்துள்ளார்.

அதுமட்டுமின்றி வரும் நாட்களில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் உடல்நலக்குறைவு உள்ளிட்ட சில சிரமங்களை எதிர்கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் தான் தேர்தல் நேரத்தில் ஜோதிடங்கள் கணிக்கப்படுகிறது என்றால் அமெரிக்காவிலும் ஜோதிடர்கள் தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்களை தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments